#Breaking: நீட், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக முதல்வர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோரின் வழக்குகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, முந்தைய அரசு காலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் மீதான வழக்குகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 868 வழக்குகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 422 வழக்குகள் இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட், பத்திரிகையாளர்கள் மீதான வழக்கு, சேலம் 8 வழிச்சாலை, வேளாண் சட்டங்கள் மற்றும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் போன்ற வழக்குகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த நிலையில், தற்போது நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோரின் வழக்கும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Withdrawn Tasmac and NEET Against Protesters Case FIR 27 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->