17 நிறுவனத்துடன் கையெழுத்து.. 47 ஆயிரம் பேருக்கும் காத்திருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்..!! - Seithipunal
Seithipunal


தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாங்கியுள்ளது.... ஜெர்மனி, பின்லாந்து, கொரியா, ஜப்பானை உள்ளிட்ட 17 நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது..

ரூ.15,128 கோடி முதலீட்டில் 17 நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.. இந்த 17 நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துவக்கம் காரணமாக 47 ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.. 

9 தொழில் நிறுவனம் நேரடியாகவும், 8 தொழில் நிறுவனம் இணையம் மூலமாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.. ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.... 

முன்னதாக தலைமை செயலாளரின் தலைமையில் பிற நாடுகளில் இருந்து வெளியேற விரும்பும் நிறுவனத்தை ஈர்க்கவும், தேவையான வசதிகள் செய்வது தொடர்பான விபரத்தை சேகரிக்கவும் குழு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Sign 17 Industries to start factory in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->