#Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு... அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவுக்கு ஒரு மாதமாகியும் ஒப்புதல் தராத ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உடனடியாக ஒப்புதல் வழங்க கோரி வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து இருக்கிறது..

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில் உயர்மட்ட அமைச்சர் குழு தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழக அரசு சற்றுமுன் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Press Release about 7.5 % Reservation govt School Medical Seat Students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->