விளையாட்டுப்போட்டிகள் பார்வையளர்கள் இல்லாமல் நடத்த தமிழக அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


ஜூன் 28 ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சாலையோர உணவுக்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனு சாதனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌. பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Permit Sports Activity Without Viewers till 28 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->