10,12ம் வகுப்பு மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில் இனி சாதி கிடையாது.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் சாதிப்பெயரை குறிப்பிட வேண்டாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்  இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனியாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால், மாற்று சான்றிதழில் ( TC ) மாணவரின் சாதியை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, "வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை பார்க்கவும்" என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டால், அந்த இடத்தை காலியாக விட்டு தர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new order in 10th 12th tc no caste


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->