தமிழக அரசு அறிவித்த  புதிய திட்டம்.! மக்கள் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் இது ஏழு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் 6.51 ஒரு கோடி ரூபாய் விரிவுபடுத்தப்படும். நடப்பாண்டில் ஆயிரத்து 133 அங்கன்வாடி கட்டிடங்கள் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 23 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

 3,000 ரூபாய் வீதம் 38 ஆயிரத்து 489 மையங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு நிதியாக 11.55 கோடியாக வழங்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் தாய் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ பொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டிகள், துண்டு  ஆகிய ஆகியவைகள் நடப்பாண்டில் 7.35 கோடி செலவில் வழங்கப்படும்.

5970 மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 8.63 கோடி செலவில் வழங்கப்படும். மேலும் சத்துணவு மையங்களில் தோட்டக்கலை துறை உதவியுடன் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் முதல் கட்டமாக ஒரு சத்துணவு மையத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து 15 மையங்களில் 5 கோடி ரூபாய் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது என்று முதல்வர் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new announced. peoples feelings happy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->