#Breaking: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11:30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மொத்தமாக 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்று அதிகரிப்பால் ஊரடங்கை உறுதி செய்தல், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தல், மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், நோயாளிகள் அனைவருக்கும் தரமான உணவு வழங்குவதை உறுதி செய்தல். 

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் எக்காரணம் கொண்டும் வீணாக கூடாது. அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும். சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டிசிவர் மருந்து விற்பனை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவை கள்ளச்சந்தையில் அல்லது அதிகளவு விலைக்கு விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற 6 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Minister Meeting 9 May 2021 6 Decision


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->