கொரோனா வைரஸ் அவசரம்: விறுவிறுப்பான முடிவை எடுத்த தமிழக அரசு.! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் சுமார் 199 நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர். 

இதனால் உலக நாடுகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், உலகளவில் தற்போது வரை 532,119 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,083 பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறையில் புதிதாக 3038 பேரை நியமிக்க ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, கூடுதலாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் மற்றும் 1508 ஆய்வு நுட்புநர்கள் ஆகியோரை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக 200 சிறப்பு அவசரகால ஊர்திகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn govt jobs required for health department


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->