மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் தமிழக அரசின் சார்பாக ரூ.1000 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இந்த சேவையான ஏப்ரல் 2 ஆம் தேதி முதலாகவே நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களில் குடும்ப அட்டைகள் இல்லாமல் இருக்கும் நபர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். 

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பாக மூன்றாம் பாலினத்தவர்களில் குடும்ப அட்டைகள் இல்லாத 4022 பேருக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt gives rice and oil for transgender corona fund


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->