#Breaking || வெள்ள அபாய எச்சரிக்கை.! சற்றுமுன் தமிழக அரசு விடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதாக  அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி நண்பகல் திறக்கப்பட உள்ளதால், சென்னை அடையாறில், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநீர்மலை, குன்றத்தூர், முடிச்சூர், அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாற்றின் இரு கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நண்பகல் 12:00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அடையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt flood warning Chembarambakkam Lake open


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->