இரவு நேர ஊரடங்கால் தமிழக அரசுக்கு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் இழப்பு - போக்குவரத்து துறை செயலாளர்..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பல்லவன் சாலையில் தடுப்பூசி போடும் பணியானது நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக போக்குவரத்து துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகளில் பணியாற்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் கொரோனா தொற்று ஏற்பட்டால், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் இருக்கும் 8 போக்குவரத்து கழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 45 வயதை கடந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியாற்றி வருகிறார். 

இவர்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வரை தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரில் தகுதியுடையோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 45 வயதை கடந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு 37 சதவீதத்தை எட்டி உள்ளோம்.

பேருந்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னதாக கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. முகக்கவசம் பயணிகள் கட்டாயம் அணிந்துகொண்டு வர வேண்டும். சில இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகராறு செய்து வருகின்றனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 284 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 2 ஆயிரத்து 790 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக 345 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பணிமணிகளில் இருந்து பேருந்து புறப்படும் போதே சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் போக்குவரத்து நிறுத்தத்தால், போக்குவரத்து கழகத்திற்கு நாளொன்றுக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பீடு ஏற்படுகிறது. இதில், அதிகபட்சமாக விரைவு போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பேருந்துகளில் இருந்து உள்ளுர் பேருந்துகள் என அனைத்துமே தனது சேவையை 9.30 மணிக்கு முடித்துக்கொள்வது போல திட்டமிட்டு இயக்கப்படும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus Loss Rs 15 Crore per day due to Nighttime Lockdown 22 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->