முன்னாள் அதிமுக அமைச்சர் இராஜேந்திர பாலாஜிக்கு கிடுப்புப்பிடி.. தமிழக அரசு பரபரப்பு பதில்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்களை சேர்த்ததற்கான முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

மதுரையை சார்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் செய்த மனுத்தாக்களில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 % சொத்து சேர்த்துள்ளதாக இலஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

தமிழக அரசின் பதில் மனுவில், "அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்களை சேர்த்ததற்கான முகாந்திரம் உள்ளது. முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. 

இதனால் தமிழக அரசு முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையில் தீவிரம் காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Appeal Madurai High Court about AIADMKI Former Minister Rajendra Balaji Case Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->