விமானங்கள் தரையிறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. மத்திய அரசு பதில்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பொதுப்போக்குவரத்துகள் முடங்கியது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இந்த திட்டத்தில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்கு அதிகளவு விமானங்கள் இயக்கப்பட்டது. தமிழகத்திற்கு மிகவும் குறையான எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.

இந்த விஷயம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுதாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 29 ஆம் தேதியான இன்று, வெளிநாடுகளில் தமிழர்களை மீட்டு வர, தமிழக விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவிலை என்று மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது. மேலும், தமிழக அரசு விமானங்களுக்கு அனுமதி அளிப்பதாக பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க திட்டம் செயல்படுத்தப்பட்ட போதும், தமிழக அரசு தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும், இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு கூறிய பதிவில், விமானங்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt answer about NRI Tamilan Case in Chennai court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->