அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியருக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து... தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


காரோண வைரஸின் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலாகி பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசிற்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது. அரசிற்கு வருமான இழப்பை சரி செய்யும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியருக்கான ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டு காலத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நிலையில் அரசு ஊழியருக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஈட்டு விடுப்பு அனுமதிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெரும் மதிப்பில் பணம் தேவைப்படுத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 

ஈட்டிய விடுப்பு ஊதியம் என்பது சொந்த காரணத்திற்க்காக ஈட்டா விடுப்பு மற்றும் தற்காலிக பணி நீக்ககாலம் என்பதாகும். இது தான் பணிக்கு வரும் நாட்களில் உள்ள விடுமுறை நாட்களில், அவசிய பணிக்காக அதிக பணி மேற்கொள்ளும் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் தேவை என்றால் சம்பளத்துடன் விடுமுறையோ அல்லது பணியுடன் சம்பளத்தொகையோ பெற அனுமதிக்கப்படுகிறது. இது 24 மாத இடைவெளியில் 30 நாட்களாகவும், 12 மாத இடைவெளியில் 12 நாட்களும் அனுமதி என வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn govt announcement about el


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->