எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி கட்... தமிழக அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவையும் முடக்கியுள்ளது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று உலக நாடுகளை போல சமூக தொற்றாக மாறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பாகவும் பல்வேறு நிதிஉதவி மற்றும் ரேஷன் பொருட்கள் உதவி செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதியை ஒதுக்கிய நிலையில், மக்களும் தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து உதவும்படி தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் பல நபர்கள் முதல்வரின் கரோனா தடுப்பு நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி பிடித்தம் செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உபயோகம் செய்து கொள்ளலாம் என்றும், இதற்காக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt Announce MLA Volume Development Fund use for corona fund


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->