#Breaking: ஜூன் மாதத்திற்கான ரேஷன் டோக்கன் விநியோகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் விலையில்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கு காரணமாக மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், மே மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூன் மாதத்திற்கான இலவச பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய தேவை ரேஷன் இலவச பொருட்கள் வாங்க மே 29 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும், ரேஷன் இலவச பொருட்களுக்கான டோக்கன் வீட்டிற்கு வந்து விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. 

மேலும், டோக்கனில் உள்ள தேதி மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம் என்றும் கூறியுள்ளது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt announce June month free ration items token issued may 29


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->