#Breaking | விவசாயிகளுக்கு தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உளுந்து மற்றும் பச்சை பயிரை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தமிழக அரசே கொள்முதல் செய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர் வகைகள், நெல், கோதுமை, காய்கறிகளுக்கு கேட்ட விலை கிடைக்கமலும், வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனைக்கு கொடுக்க முடியாமலும், இடைத்தரகர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு தங்களுடைய விளைவித்த பொருட்களை விற்பனை செய்து, பெருத்த நஷ்டத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் தமிழக அரசால் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், உளுந்து மற்றும் பச்சை பயிறு ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நடப்பாண்டில் 4,000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைபயிறும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து தமிழக அரசே கொள்முதல் செய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும், உளுந்துக்கு கிலோ ரூ.63-ம், பச்சை பயிறுக்கு ரூ.72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce for ulunthu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->