திருத்தணியில் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோவில்கள் திறக்கவும் பக்கதர்கள் வழிபடவும் தமிழர அரசு அனுமதியள்ளதை அடுத்து பல்வேறு கோவில்களில் மக்கள் சென்று வழிபட்டு, தங்களின் வேண்டுதலகளை நிறைவேற்றி வருகின்றனர். கோவில் நிர்வாகங்களும் அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றது. இந்த நிலையில், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட் 4 வரை பக்த்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சூரபத்மனுடன் போர்புரிந்து தேவர்கள் துயர் நீக்கி வள்ளியை மண்ந்துகொள்ள வேடர்களுடன் விளையட்டாக போர்புரிந்து முருக பெருமான் கோபம் தணித்து அமர்ந்த தலம் திருத்தணி என்று அக்கோவிலின் தல வரலாறு கூறுகின்றது. 

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில பக்த்தர்களும் சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை மறுநாள் ஆடி கிருத்திகை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிலிருந்து ஆகஸ்ட் 4 வரை பக்த்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் 4 வரை நடைபெறும் தெப்ப உற்சவம் பக்த்தர்கள் இன்றி நடைபெறும் எனவும் கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Announce 5 Days Peoples Could Not Come Thiruthani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->