நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு, உள்ளாட்சி தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாவட்ட தலைவர், ஒன்றிய, மாவட்ட, ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி உட்பட, 26 இடங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், 42 இடங்களில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் 266 ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 294 பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஆனது ஜன. 30-ல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் சுப்பிரமணியன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடவடிக்கையை 10.30 மணிக்கும், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கையை பிற்பகல் 3 மணிக்கும் தொடங்கப்பட வேண்டும். மறைமுக தேர்தல் கூட்டம் தொடர்பாக 7 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

மறைமுகத் தேர்தல் குறித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தால், அதை முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி மறைமுக தேர்தல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இடங்கள்:

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மட்டும் இல்லாமல் ஊத்தங்கரை, வாடிப்பட்டி, பரமத்தி, கொளத்தூர், சேலம் திருமங்கலம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவிலங்காடு, திருத்தனி, நரிகுடி, ராஜபாளையம், சாத்தூர், வத்திராயிருப்பு, மங்களூர், நல்லூர், மொரப்பூர், ஈரோடு, தொக்கநாயக்கன்பாளையம், சிவகங்கை திருப்புவனம், பேராவூரணி, சின்னமனூர், கே.மயிலாடும்பாறை, பெரியகுளம், தாண்டாரம்பேட்டை, துரிஞ்சாபுரம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி, 42 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவி, 266 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகள்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN election commission announced secret election date for issue locations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->