தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. காலியாகும் சென்னை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 

இதற்காக, ஏப்ரல் 1 ஆம் தேதியான நாளை முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் 3,090 பேருந்துகள் இயக்கப்பட்டு மொத்தமாக சுமார் 14,215 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

இதனைப்போன்று கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 2,644 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை வழக்கமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

பின்னர், ஏப்ரல் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதியில் இருந்து மாதவரம், கே.கே நகர், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையத்தின் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Election 2021 Special bus to Went Native


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->