ஊழல் செய்து, திகார் சிறைவாசம் அனுபவித்தவரின் பேச்சை பாருங்க - மருத்துவர் இராமதாஸ் சரமாரி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


ரூ.1.76 இலட்சம் கோடியளவில் ஊழல் செய்து, ஒன்றரை வருடம் திகார் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவரின் பேச்சு எப்படி தரமற்று இருக்கிறது என பாருங்கள் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " பெண்களிடம் ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என மூன்று சக்தி இருக்கிறது. பெண்களை தெய்வமாக வணக்கும் நாடாக இருக்கும் இங்கு, பெண்களையும், தாய்மார்களையும் அவதூறாக பேசியிருக்கிறார் திமுககாரர்.

ரூ.1.76 இலட்சம் கோடியளவில் ஊழல் செய்து, ஒன்றரை வருடம் திகார் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவரின் பேச்சுக்கள் இது. கடந்த 1954 ஆம் வருடத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது 24 வயதிலேயே சிலுவம்பாளையம் பகுதியின் கிளை செயலாளராக பணியாற்றி, 32 வருடத்திற்கு பின்னர் தமிழக முதல்வராக வந்துள்ளார். 

நானும் முதல்வர், நானும் சட்டசபை செல்கிறேன் என்றும் தந்தையுடன் சட்டசபைக்கு சென்றவர் சட்டையை கிழித்து பனியன் வியாபாரம் செய்தார். மு.க ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு நான் தான் காரணம். நான் சொல்லித்தான் அவருக்கு துணை முதல்வர் பதவியே வந்தது. மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்து செய்த பணிகள் என்ன?. இவருக்கு தெரிந்தது வெளிநடப்பு மட்டும் தான் " என்று பேசினார்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Election 2021 Dr Ramadoss Election Campaign Edappadi Speech about DMK A Raja 2 G Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->