தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகும் அந்த அறிவிப்பு?! வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2018 - 19 நிதியாண்டில் மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் மதிப்பீடு 12623 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் இந்த நஷ்டத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மின் கட்டணத்தை தமிழகத்தில் அதிகரிப்பதை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இல்லாதா நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி விலை, ரயில் கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி சாதனங்களின் பராமரிப்பு செலவுகள் அனைத்தும் இந்த 6 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மின்சாரத்தை வாங்கும் தமிழக அரசு அதனை விற்பனை செய்யும் தொகை கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் வித்தியாசம் உள்ளது. இதனால், மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn eb bill may be raise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->