#Breaking: தமிழகத்தில் 4 ஒலிம்பிக் அகாடமிகள்.. 12 வயது முதல் சர்வதேச பயிற்சி - தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, விளையாட்டு வீரர்களிடையே அவர் உரையாற்றினார்.

இந்த உரையில், " அரசியலை விளையாட்டாக நினைக்கும் பலரும் இந்தியாவில் உள்ளார்கள். தற்போதைய சூழலில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக்கொள்ள கூடாது. தோனி மைதானத்தில் சிக்ஸர் அடித்தால் மைதானத்தில் இருப்பவர்களில் இருந்து, அதனை நேரலையில் தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் வரை சிக்ஸர் அடித்தது போல உணர்கிறோம்.   

கால்பந்தில் ரொனால்டோ கோல் அடித்தால் மைதானத்தில் இருப்பவர்களில் இருந்து, அதனை நேரலையில் தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் வரை சிக்ஸர் அடித்தது போல உணர்கிறோம். தமிழக விளையாட்டுத்துறையை மேம்படுத்த தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. 

தமிழகத்தை 4 பகுதிகளாக பிரித்து ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும். அனைத்து வகையான விளையாட்டுகளை விளையாடுதல், பயிற்சியெடுத்தல், அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குதல், அவர்களின் விளையாட்டு பயணத்திற்கு உதவி செய்தல் என அனைத்தையும் தமிழக அரசு செய்யும். 

இந்திய அளவிலும், உலக அளவிலும் நாம் பல வெற்றியை அடைந்து, சீனா மற்றும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை போல பெரும் சாதனை படைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைகள் என்பது எனக்கு தெரியும். 

சென்னையின் மேயர் மற்றும் தமிழக துணை முதல்வராக நான் இருக்கையில், பல விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் விளையாட்டு வீரர்களின் உழைப்பு எனக்கு தெரியும். விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு 12 வயதில் இருந்து சர்வதேச அளவிலான பயிற்சி வழங்கப்படும். 

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். தமிழக வீரர்களே சென்று வருக, தரணியை வென்று வருக.! " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Speech 26 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->