#Breaking: ஆட்சி அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி இல்லை., உண்மையான மகிழ்ச்சி இதுதான் - தமிழக முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி துவாக்குடி என்.ஐ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ரெம்டிசிவர் மருந்துகள் விற்பனை விவகாரத்தில், கீழ்ப்பாக்கத்தில் மட்டும் தொடங்கப்பட்ட விற்பனை மையத்தை தொடக்கத்தில் ஆலோசனை நடத்தி 5 மாவட்டத்தில் ஏற்படுத்தினோம். 

இதனைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவர் மருந்து விநியோகம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டது. 1200 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகாரிகளை முடுக்கிவிடுதல், மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டத்தில் 22 அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு,குறு நிறுவனங்களுக்கான சிறப்பு போனஸ், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உதவி என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகமுள்ள மண்டலத்திற்கு தனி கண்காணிப்பு அதிகாரிகள் அமைக்கப்ட்டுள்ளார்கள். 

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் செவிலியர்கள், மருத்துவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுளள்து. மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

சட்டமன்ற கட்சிகள் சார்பாக எம்.எல்.ஏக்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். ஒடிசா மற்றும் மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் தமிழகத்திற்கு வருகிறது. மருந்து மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு டிட்கோ மூலமாக உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைஉச்சபரவலின் போது எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்களின் உயிரை காப்பாற்றவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆட்சியை அமைத்து 14 நாட்களில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

எனது தலைமையிலான தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட, கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாளே எனது மகிழ்ச்சியான நாள். தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற நிலை வரும்போதுதான், எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி. எனக்கும் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். 

மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். ஜூன் மாதம் 3 ஆம் தேதிக்குள் ரூ.4 ஆயிரத்தில் மீதமுள்ள ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். கொரோனா ஊரடங்கை கடுமையாக வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். 

தற்போது கொரோனா பரவலால் டெல்லி செல்ல இயலவில்லை. அதற்கான சந்தர்ப்பம் வந்ததும் டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் நிலைகள் குறித்து விவரிக்கப்ட்டு, நமக்கானவை பெறப்படும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Pressmeet 21 May 2021 Trichy NIT College


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->