நீட் இரத்து விவகாரத்தில் திமுக - அதிமுக கூட்டு.. எதிர்க்கட்சி தலைவர் - தமிழக முதல்வர் உறுதி.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிக்கு அதிமுக துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் நீட் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், " ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை.

திமுக இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பொது நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என 4 முதல் 5 முறை வலியுறுத்தி இருக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி உறுதுணையாக இருக்க வேண்டும் " என்று தெரிவித்தார். 

இந்த விஷயத்திற்கு மனப்பூர்வமான பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, " நீட் தேர்வு விவகாரத்தில், நீட் தேர்வை இரத்து செய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிர்க்கட்சி உறுதுணையாக இருக்கும் " என்று பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Opposite Legislative Assembly Leader Union on Against NEET Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->