முக்கிய ஆலோசனையில் ஈடுபடப்போகும் தமிழக அரசு... வெளியாகப்போகும் அறிவிப்புகள்?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

முதல்வராக பொறுப்பேற்று தலைமை செயலகத்திற்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு இருந்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் mulu ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகள் உட்பட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணிவரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இன்று (09/05/2021) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு, தமிழகத்தின் வளர்ச்சி, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Ministry Meeting Today at 11 AM


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->