ஆளுநரை சந்தித்த தமிழக முதல்வர்! வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இந்த குளிர்கால கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்திருக்கிறார்கள். 

சபாநாயகர் தனபால் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் செப்டம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்ததும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் தெரிவித்ததாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm meet to tn governor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->