தமிழகத்தில் அமையப்போகும் பிரம்மாண்டம்.. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.!! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோவில் கட்ட 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஆண்டு வழங்கினார். அதற்கான ஆவணத்தை தேவஸ்தானம் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமி அப்படித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஏழுமலையான் கோவில் கட்ட தேவையான நிர்வாக அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் கட்டுமானத்திற்காக 4 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

இந்த இடம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது என்பதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இணைக்கும். பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், மதுரை வரை பயணிக்கும் தமிழ்நாடு பக்கதர்களுக்கும், சபரிமலைக்கு செல்லும் பக்கதர்களுக்கும் முக்கிய ஸ்தலமாக அமையும். 

இந்த இடத்தை சுற்றி 200 கிலோ மீட்டர் சுற்றளவில் வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் இல்லை. அத்துடன் இந்த கோவிலில் மாநிலம் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோயிலை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதியும் தமிழக அரசு ஏற்கும். 

கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளத் தேவை நிர்வாகம் அனுமதி தரவேண்டும். அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் கட்டுமான நடவடிக்கையை உடனடியாக எந்த இடத்தில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm letter to andhra cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->