#Breaking: ரம்மி உட்பட கேடுகெட்ட பல ஆப்களுக்கு ஆப்பு.. தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள விமான நிலையத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. ரம்மி விளையாட்டு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

இளைஞர்களின் நேரம் மற்றும் பணத்தை விரயம் செய்து, அவர்களின் உயிர்களை மாய்த்து வரும் விளையாட்டுகளை, மக்களின் நன்மையை கருதி அனைத்து ஆன்லைன் பணம் வைத்து நடைபெறும் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் பிற செயலிகள் என அனைத்தையும் அதிமுக அரசு தடை செய்யவுள்ளது. 

இதற்காக தனியொரு சட்டம் இயற்றப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ரம்மி போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் " என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் ரம்மி போன்ற விளையாட்டுக்களால் பலரும் பரிதாபமாக தங்களின் உயிரையும், பணத்தையும் இழந்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சட்டத்தை விரைவில் அமல்படுத்தி, செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Pressmeet about Ban Online Rummy Games


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->