" சட்டம் தன் கடமையை செய்யும் " முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி.! - Seithipunal
Seithipunal


திருத்தணியில் இன்று பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையை, மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தொடக்கி வைக்க, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருத்தணிக்கு புறப்பட்டு உள்ளார். அவருடன் எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் புறப்பட்டு உள்ளனர்.

திருத்தணி நோக்கி தனது தொண்டர் படையுடன், எல்.முருகன் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் படை சூழ புறப்பட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த பயணம் தொடங்கியுள்ளது. ஆனால், இவர்களை காவல்துறையினர் இடையிலேயே தடுத்து நிறுத்திய நிலையில், எல்.முருகன் திருத்தணிக்கு சாமிகும்பிட செல்வதாக கூறியதை அடுத்து, அவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இருந்தாலும் வழிநெடுக பாஜக தொண்டர்கள் அவருடன் இணைந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஊட்டியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கையில், பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பான கேள்விகள் எழுபட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, " சட்டம் தன் கடமையை கட்டாயம் செய்யும். அனைவருக்கும் சட்டம் என்பது பொதுவானது " என்று தெரிவித்தார். இதனால் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Palanisamy Pressmeet about BJP Vel Yatra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->