தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுமா.? இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 571 பேருக்கு வைரஸ் தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்ற விரிவான ஆலோசனை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm consultation with district collectors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->