சென்னை வாசிகளுக்கு நிம்மதி தரும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலவர்!  - Seithipunal
Seithipunal


சென்னையில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுவரும் மேம்பாலங்கள் திறப்பு குறித்து, நேற்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வாய்த்த முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் திறக்கபடும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், கொளத்தூர் மேம்பாலம் வலதுபுற பாலத்தின் பணி 90% பணி முடிந்துள்ளது. அடுத்த மாதம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதல்வரின் அந்த அறிவிப்பில் மேலும், "93 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பாலம்கோயம்பேடு பாலம் 75% பணிகள் முடிந்துள்ளது. அது டிசம்பர் மாதம் 2020-இல் திறக்கப்படும். 64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சென்னை கீழ்கட்டளையில் பாலத்தின் பணிகள் 82% முடிந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ஒரு பகுதியாகவும், ஜனவரி மாதம் ஒரு பகுதியாகவும் திறக்கப்பட உள்ளது.

வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் திறக்கப்படும். 146 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேடவாக்கம் பாலம் 85 % பணிகள் முடிந்துள்ளது, டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு திறக்கப்படும்" என்றும் தமிழக முதல்வர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm announce for chennai bridges open


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->