மீதி சில்லறை தராத பேருந்து நடத்துனர்.! இரண்டு வருடம் போராடி பெற்ற கோவில்பட்டி ஜெயப்ரகாஷ்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் அந்த பகுதியில் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது வேலை பணி நிமிர்த்தமாக மதுரைக்கு சென்று உள்ளார்.

பின்னர் இரவு 11 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து மதுரை மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து பேருந்து ஆகும். 

நடத்துனரிடம் ஜெயபிரகாஷ் 500 ரூபாய் பணத்தை கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துனர், சில்லறை இல்லை என்று கூறி, உடனே பேருந்தை விட்டு கீழே இறங்கு, என்று அவதூராக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரவு பதினோரு மணி என்பதால் என்னால் பாதிவழியில் பேருந்தில் இருந்து இறங்க முடியாது. திருமங்கலம் வந்ததும் அங்குள்ள கடையில் நான் சில்லறை மாற்றி உங்களிடம் தருகிறேன் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கு நடத்துநர் இந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நிற்காது என்று தெரிவித்துவிட்டு சென்று விட்டார். ஆனால் திருமங்கலத்தில் பத்து நிமிடங்கள் நின்று உள்ளது. அப்போது ஜெயபிரகாஷ்,  'நான் கீழே இறங்கி அருகில் உள்ள கடையில் 500 ரூபாய்க்கு சில்லறை மாற்றி தருகிறேன், நான் கொடுத்த 500 ரூபாயை தாருங்கள்' என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு நடத்தினர் ஜெயபிரகாஷ் இடம் டிக்கெட் மட்டும் கொடுத்துவிட்டு, அவர் கொடுத்த 500 ரூபாயை தரவில்லை. மேலும், டிக்கெட்டுக்கான தொகை போக மீதி சில்லரை பணத்தையும் நடத்துனர் தரவில்லை. பின்னர் பேருந்து பொறப்படவே கோவில்பட்டி பேருந்து நிலையம் வந்தது.

அப்போது ஜெயப்பிரகாஷ், 'நான் இறங்க வேண்டிய பேருந்து நிலையம் வந்துவிட்டது. எனது டிக்கெட் போக மீதத் தொகையை தாருங்கள்" என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர், 'மீதமுள்ள பணத்தை மதுரை புதுகுளத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வந்து பெற்றுக் கொள்' என்று தெரிவித்துள்ளார்.

இரவு நேரம் என்பதால் அவரிடம் மேலும் வாக்குவாதம் செய்யாமல் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் புகார் மனு ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.

ஆனால் இவரின் இந்த புகார் மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு உள்ளார். அதிலும் சரியான பதில் இல்லை.

இந்நிலையில், ஜெயபிரகாஷ் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த ஆணையத்தின் தலைவர் தமிழ் குமார் முன்னிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் முடிவில், 'தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட ஜெயப்பிரகாஷ்-க்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் வழங்காமல் அவரை மன உளைச்சலுக்கும், பொருள் விரயத்தை ஏற்படுத்திய, மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 3000 ரூபாய் அபராதம் விதிப்பதாக' ஆணையத்தின் தலைவர் தமிழ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தராமல் இருந்த பொது தகவல் அலுவலருக்கு நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது? என்ற கேள்வியையும்  தமிழ் குமார் எழுப்பி, இதுகுறித்து பதில் தருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக போராடியது குறித்து ஜெயபிரகாஷ் தெரிவிக்கையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை அரசு போக்குவரத்து கழகம் எனக்கு தரவேண்டிய 402 ரூபாய் காசோலையாக அனுப்பி விட்டது. ஆனால் அந்த இரவு நேரத்தில் என்னை அவதூறாக பேசி, என்னை மன உளைச்சலுக்கு உண்டாக்கியதற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் போராடி வந்தேன். அதற்கான நியாயம் தற்போது கிடைத்துள்ளதாக நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bus contactor ticket paisa issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->