கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை அறிவித்தது தமிழக பாஜக..! - Seithipunal
Seithipunal


மேகதாது அணையை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான மேகதாது என்ற இடத்தில், காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணையை கட்டுவதற்கு பல வருடமாக முயற்சித்து வருகிறது. கடந்த சில மாதமாக இந்த விஷயத்தில் முனைப்பு காண்பித்துள்ள கர்நாடக அரசு, மத்திய ஆட்சியாளர்களை அடிக்கடி சந்தித்து வருகிறது. 

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா பதவி விலகிய பின்னர், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் மேகதாது அணை விஷயத்தில் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதனால் மேகதாதுவில் அணை கட்டுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், தமிழக ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கையில் அவர்களால் அணையை கட்ட முடியாது, மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்காது என்று வாயமொழியாக கூறி அனுப்பி வைக்கின்றனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மத்தியிலும் பாஜக ஆள்வதால் மேகதாது அணை கட்டப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், தமிழக பாஜக மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட கோரி தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் 05.08.2021 வியாழக்கிழமை, காலை: 9.00 மணி முதல் மாலை: 5.00 மணி வரை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். மேலும், இந்த உண்ணாவிரத போராட்டத்தில், " தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவேரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்து விரைந்து திட்டத்தை நிறைவேற்ற கோரியும், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசை வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசாங்கம் உடனடியாக வழங்க கோரியும், ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க அரசு தடுத்திட வேண்டும் என்றும், நீர்வளத்தை பாதிக்கக்கூடிய தைல மரங்களை அரசு இடங்களில் உள்ளவற்றை அழித்து நற்பலன் தரக்கூடிய மரங்களை தமிழகஅரசு பயிரிடக் கூறியும், அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து விவசாயிகளை தமிழக அரசு பாதுகாத்திட கோரியும் " போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Announce Protest Against Karnataka Govt about Megadatu Dam Issue 5 Aug 2021 at Trichy One Day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->