திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் கவனத்திற்கு... மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் வெகு விமர்சையாக நடைபெறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப திருநாள் கிரிவலத்திற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், மகா தீபம் ஏற்றும் நவம்பர் 29 ஆம் தேதியும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழா நடைபெறும் 9 நாட்களில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், இணையத்தளம் வாயிலாக பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இதில், " வரும் நவம்பர் 17 ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்தில் துவங்கி, டிசம்பர் 3 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உள்ள வருதல் வரை திருவிழா நடைபெறுகிறது. 

வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 29 ஆம் தேதி கோவில் வளாகத்திற்குள் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

பக்தர்கள் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்ய காலை 6.30 மணிமுதல் இரவு 8 மணிவரை கொரோனா வழிகாட்டுதலின் படி அனுமதி வழங்கப்படும். வார நாட்களில் 4 ஆயிரம் பக்தர்களுக்கும், இறுதி விடுமுறை நாட்களில் 8 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

தீபத்திருநாட்களான 17 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் www.arunachaleswawawtemple.tnhrce.in என்ற இணையத்தின் மூலமாக பதிவு செய்து மட்டுமே வர வேண்டும். 

ஒரு நபருக்கு ஒரு பதிவு சென்ற வீதத்தில், அடையாள அட்டையுடன் வரும் நபர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். 29 ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இந்த நிகழ்ச்சிகளை இணையத்தளம் மற்றும் அரசு கேபிள் நிகழ்ச்சிகளில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி கிடையாது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் கிடையாது. மாடு மற்றும் குதிரை சந்தைகளுக்கு இவ்வருடம் அனுமதி கிடையாது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Visiting Peoples Condition 13 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->