பிரீ பாஸுல ல வர்ற நீயெல்லாம் உட்காரலாமா?.. அரசுப்பள்ளி மாணவரை தகாத வார்த்தையால் திட்டிய நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


அரசின் இலவச பஸ்பாஸில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள், சீட்டில் அமர்ந்து வருவதா? என்று மாணவர்களை தாக்கிய நடத்துனர் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சிபுரம் செல்ல அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்து உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஏறி இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர். 

மாணவர்கள் இருக்கையில் அமர்ந்ததைக்கண்ட அரசு பேருந்து நடத்துனர் ஜெகன், ஆத்திரத்தில் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அரசின் இலவச பாசில் செல்பவர்கள் சீட்டில் அமர கூடாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட மாணவர்களும் அமைதியாக இருந்த நிலையில், ஆத்திரமடைந்த நடத்துனர் மாணவர்களை பேருந்தை விட்டு இறக்கி வேறு பேருந்தில் வருமாறு கூறியுள்ளார். 

இதனையும் மாணவர்கள் கண்டுகொள்ளாமல் சீட்டிலேயே அமர்ந்திருந்த நிலையில், ஒரு மாணவனை நடத்துனர் தலையில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடிவாங்கிய மாணவன் பேருந்தில் இருந்து அழுது கொண்டே கீழே இறங்கி தன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பேருந்து நிலையத்திற்கு உறவினர்களுடன் புறப்பட்டு வந்தனர். 

மேலும், பேருந்து நிலைய நேர தணிக்கையாளர் அலுவலகத்தில் இருந்த நடத்துனர் ஜெகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த நடத்துனர் ஜெகன், செய்த தவறுக்காக மாணவர்களிடமும், அவரது பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. 

நடத்துனர் திட்டியும் பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்காததை வைத்து பார்த்தால், குறித்த நடத்துனர் பலமுறை மாணவர்களை திட்டியிருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Uthiramerur Bus Conductor Abuse Speech School Students Using Bus Pass


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->