தமிழகத்திலேயே இரண்டாவது காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்கும் திருநங்கை சிவன்யா..! குடும்பத்தினர் உதவியால் கனவுகள் நனவானது.!! - Seithipunal
Seithipunal


திருநங்கையாக மாறியவரை குடும்பத்தினர் அன்போடு கவனித்துக்கொண்டதால், இரண்டாவது திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர். இதில் செல்வவேல் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் 3 பிள்ளைகள் உள்ளனர். முதல் பிள்ளையான ஸ்டாலின் எம்.ஏ.பி.எட் பயின்றுள்ளார். ஸ்டாலின் விவசாய பணிகளில் தற்போது ஈடுபட்டு யாரும் நிலையில் இரண்டாவதாக பிறந்தவர் சிவன்யா. இவர் திருநங்கையாக மாறிவிட்டார். 

மூன்றாவது பிள்ளையான தமிழ் நிதி தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருநங்கையாக இவன்யா பி.காம் பட்டதாரியும் ஆவார். பள்ளிப்படிப்பை அங்குள்ள அரசு பள்ளியில் நிறைவு செய்த சிவன்யா, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் பயின்றுள்ளார். மேலும், தமிழக அரசின் போட்டித்தேர்வுக்கும் தயாராகி இருக்கிறார்.  

காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்ட சிவன்யா, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து தற்போது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார். உடற்தகுதி தேர்வு, நேர்காணல் என அனைத்து தேர்வுகளிலும் வெற்றியடைந்த சிவன்யா தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிவன்யாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பெரும் சிரமத்திற்கு இடையே பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்த சிவன்யா, திருநங்கையாக மாறியிருந்தாலும் அவரது குடும்பத்தினர் அவரை தனிமைப்படுத்தாமல் பார்த்துக்கொண்டது மட்டுமே தனது வெற்றிக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவன்யாவுக்கு தேவையான உதவிகளை செய்த நிலையில், அதன் பலனாக இன்று உயர்ந்த நிலையை அடைந்து காவல்துறையில் பணியாற்றவுள்ளார். இதனால் தனது நெடுநாள் கனவு நனவாகியுள்ளது என்று கூறியும் பூரிப்படைகிறார். இதுமட்டுமல்லாது தனது அடுத்த கனவு குரூப் 1 தேர்வில் வெற்றியடைந்து துணை காவல் கண்காணிப்பாளராக மாற வேண்டும் என்பது தான் எனவும், அதற்காக தயாராகி சாதிப்பேன் என்றும் தெரிவிக்கிறார்.   

இந்த விஷயம் தொடர்பாக சிவன்யாவின் சகோதரர் ஸ்டாலின் தெரிவிக்கையில், " சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கைகளுக்கு ஆதரவு வழங்கினால் அவர்களும் நல்ல பணிகளில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சிவன்யாவை நாங்கள் ஒதுக்காமல் அவரின் மீது அதே அன்பு பாசத்தை காண்பித்தோம். தற்போது அவர் படித்து உயர்ந்து நல்ல நிலைக்கு சென்றுள்ளார். 

சென்னையில் ஒரு வருடம் பயிற்சி நிறைவு பெற்றதும் சிவன்யாவுக்கு எந்த ஊரில் பணி ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். தமிழகத்தின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான சேலத்தை சார்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னையில் பணியாற்றி வருகிறார். அதே வரிசையில் இரண்டாவதாக சிவன்யா பணிக்கு சேர்ந்துள்ளார். எங்களுக்கு இது மகிழ்ச்சியே " என்று தெரிவித்தார்.

சிவன்யா கனவுகள் நனவாகி, வாழ்க்கையின் ஓட்டத்தில் தடம்மாறி சென்ற பல திருநங்கைகளின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி உயர்த்த வாழ்த்துக்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Transgender Takes Charge as Police Sub Inspector Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->