காவல்துறையினர் தேடி வந்தவர் ஆற்றுப்படுகையில் மர்ம மரணம்.. உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


போளூரில் மணல் கடத்தப்படுவது தொடர்பான புகாரில் தேடப்பட்டு வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப்படையில், அப்பகுதியை சார்ந்த முரளி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் முரளியை நேற்று முன்தினம் தேடி வந்துள்ளனர். காவல் துறையினர் தன்னை பிடிக்க வருவதை அறிந்த முரளி, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காவல் துறையினர் தொடர்ந்து முரளியை விரட்டி சென்றுள்ளனர். 

இறுதியில், முரளி தப்பி சென்றுவிட்டதாக காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவில் அங்குள்ள பொங்கலூர் ஆற்றுப்படுகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் முரளியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்த முரளியின் உறவினர்கள் முரளியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி போராட்டம் நடத்தவே, காவல் துறையினர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Polur Man Mystery Death Police Search about Sand Smuggling Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->