லாரியை நிறுத்தி சோதனை செய்த காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமாக சிக்கிய கடத்தல் கும்பல்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக், தனிப்படை காவல் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுமன் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை காவல்துறையினர், ஆந்திராவில் இருந்து கடத்தப்படும் குட்கா கடத்தல் தொடர்பான ரகசிய தகவல்களை சேகரித்தனர். 

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டும் குட்கா தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு இருந்த நிலையில், கண்ணமங்கலம் சோதனைச் சாவடியில் வழக்கம்போல வாகனத் தணிக்கை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியை மடக்கி பிடித்துள்ளனர்.

இதன் போது லாரியில் 40 பாக்கெட்டுகளில் சுமார் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட உலகநாதன் (வயது 48), திருவண்ணா மலையைச் சார்ந்த ஜாகிர் உசேன் (வயது 48), அப்துல் காதர், அந்தோணி (வயது 39), சவரிமுத்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 22), தமிழரசன் (வயது 26), சுகுமார், சகுந்தலா, அன்பழகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். குட்கா மற்றும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Police arrest Kanja Smuggling gang and Confiscation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->