எழுதிக்கொடுத்ததை கூட படிக்கச் தெரியல, மு.க ஸ்டாலினை வச்சி செய்த அன்புமணி.! - Seithipunal
Seithipunal


" அந்த காலத்தில் பானை ஓலையில் எழுதிவைப்பார்கள் " என்று மு.க ஸ்டாலின் பேசுகிறார். பனை ஓலையில் எழுதி வைப்பார்கள் என்று சொல்வதற்கு பதிலாக உளறுகிறார் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விமர்சித்தார்.

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " 

எதிர்க்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின், சட்டமன்றத்தில் செய்தது என்ன?. உள்ளே சென்று வெளிநடப்பு செய்வதுதான் அவரது பாணி. சட்டசபையில் சட்டையை கிழித்து பனியன் விளம்பரத்தை கொடுத்ததை தவிர, வேறென்ன மு.க ஸ்டாலின் செய்துள்ளார். மு.க ஸ்டாலினுக்கு விவசாயி என்றால் என்ன தெரியுமா?. விவசாய பணிகள் என்னவென்று தெரியுமா?.

நமது முதல்வர் விவசாயி எடப்பாடி பழனிச்சாமி இயற்கையானவர், இயல்பானவர், நடிக்க தெரியாது. விவசாய பணிகள் ஒவ்வொன்றும் அவருக்கு தெரியும். மு.க ஸ்டாலின் மகா நடிகர். மு.க ஸ்டாலினுக்கு விவசாயத்தில் இருந்து, இட ஒதுக்கீடு, வரலாறு, கணக்கு, குடியரசு நாள், சுதந்திர நாள் எதுவென்றே தெரியாது. இப்படியான நபர் உங்களுக்கு முதல்வராக தேவையா?. 

ஒரு நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் பேசுகிறார், " அந்த காலத்தில் பானை ஓலையில் எழுதிவைப்பார்கள் " என்று பேசுகிறார். பனை ஓலையில் எழுதி வைப்பார்கள் என்று சொல்வதற்கு பதிலாக உளறுகிறார். 14 ஆயிரம் கோடியில் 5 ஆயிரம் கோடியை கழித்தால், மீதி 7 கோடி வரும் என்பது மு.க ஸ்டாலின் கணக்கு. அந்த அளவிற்கு அவர் கணக்கில் புலி " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai PMK Anbumani Ramadoss Election Campaign 2 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->