மீன்பிடிக்க சென்று முதலைக்கு இறையான சோகம்.. சாத்தனூர் அணையில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் தற்போது 71 அடியில் நீர் இருக்கிறது. இந்த சாத்தனூர் அணையில் ஏராளமான முதலைகள் உள்ள நிலையில், அண்மையில் மீன்பிடிக்க மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால், அனுமதியின்றி பலரும் இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக மீன்பிடிக்கும் செயலும் அரங்கேறி வந்தது. இந்நிலையில், அங்குள்ள தண்டராம்பட்டு மதுரா புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (வயது 42), இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் அனுமதியின்றி அணையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். 

இவர் தனது நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், மட்டபாறை பகுதியில் மீன்களை பிடிக்க வலை வீசியுள்ளார். அந்த சமயத்தில், நீரில் இருந்த முதலை திடீரென அவரது இடது பக்க காலை பிடித்து இழுத்து கடித்து குதறி உள்ளது. 

முதலையிடம் இருந்து தப்பிக்க முயன்ற நேரத்தில், மீன் வலையில் சிக்கி முருகேசன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் நண்பர்கள் மற்றும் கிராமத்தினர், இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், முருகேசனின் சடலத்தை மீட்டனர். முருகேசனின் உடலை இழுத்துச் செல்ல முடியாமல் முதலை, அதனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளது. முருகேசன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai man died duo to crocodile attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->