காம்பவுண்டுக்குள் பாய்ந்து அடித்த புள்ளிங்கோஸ், காவல் நிலையத்தில் கதறல்?.. மொத்த கூட்டமும் அரஸ்ட்?.! - Seithipunal
Seithipunal


கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவனை கும்பலாக சேர்ந்து தாக்கிய கயவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவருக்கும், மற்றொரு மாணவ தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற திருவிழாவிற்கு ஒருதரப்பு மாணவர்கள் சார்பாக பேண்ட் செட் இசைக்குழுவினர் சென்றுள்ளனர். இதன்போது பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது. மேலும், இசைக்குழுவை சார்ந்த ஒரு மாணவரை வாலிபர் அடித்து ஓடவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட பகையில் சம்பவத்தன்று தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்கு வந்த ஒருதரப்பு, மற்றொரு தரப்பில் சிக்கிய அமைதியான மாணவனை பள்ளிக்கு ஒதுக்குபுறமாக அழைத்துச்சென்று அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், கன்னத்திலேயே பளார், பளார் எனவும், பாக்சிங் கிங் போல ஒல்லியாக இருந்த சொங்கி பாய்ந்து அடிக்கும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. விடீயோவின் இறுதியில் சிக்கிய மாணவரிடம் உன்னை நான் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, நான் அடிக்க வந்தவன் கையில் கிடைக்காததால், அவனுடன் அமைதியாக இருந்த உன்னை அடிக்கிறேன் என்று வடிவேல் பாணியில் கூறி செல்கிறான். 

இது போன்ற கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் பல்வேறு சண்டைகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆதாரபூர்வமாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று இந்த விஷயம் தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாக நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பாட்டாளி மக்கள் கட்சியினர், அங்குள்ள கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பள்ளிவளாகத்தில் மாணவரை தாக்கிய 3 பேர் உட்பட 6 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறப்பட்ட புகைப்படம் வைரலானது.. 

ஆனால், இது குறித்த புகைப்படத்தில் காவல் நிலையத்தில் கைதாகியுள்ளவர்களுக்கும், மேற்கூறிய அரசு பள்ளி சம்பவத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், இரண்டு வேறு வேறான சம்பவங்கள் என்றும் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், " எல்லாம் படித்து வேலைக்கு செல்லும் வரை.. இள வயது வெட்டி வீராப்பு.. குடும்பம், சூழ்நிலை என வீட்டு நிலை தெரியாத மத்தாப்பூக்கள் " என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Kilpennathur Govt School Students Fight Police Arrest Culprit Students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->