பள்ளி மாணவரை ஒதுக்குபுறமாக அழைத்து சென்று தாக்கிய புள்ளிங்கோஸ்.. அரசு பள்ளியில் அடாவடி.! - Seithipunal
Seithipunal


கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவனை கும்பலாக சேர்ந்து மற்றொரு தரப்பு வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவருக்கும், மற்றொரு மாணவ தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற திருவிழாவிற்கு ஒருதரப்பு மாணவர்கள் சார்பாக பேண்ட் செட் இசைக்குழுவினர் சென்றுள்ளனர். இதன்போது பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது. மேலும், இசைக்குழுவை சார்ந்த ஒரு மாணவரை ஜாகிர் என்ற வாலிபர் அடித்து ஓடவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட பகையில் சம்பவத்தன்று தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்கு வந்த ஒருதரப்பு, மற்றொரு தரப்பில் சிக்கிய அமைதியான மாணவனை பள்ளிக்கு ஒதுக்குபுறமாக அழைத்துச்சென்று அடித்து நொறுக்கியுள்ளனர். 

மேலும், கன்னத்திலேயே பளார், பளார் எனவும், பாக்சிங் கிங் போல ஒல்லியாக இருந்த சொங்கி பாய்ந்து அடிக்கும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. விடீயோவின் இறுதியில் சிக்கிய மாணவரிடம் உன்னை நான் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, நான் அடிக்க வந்தவன் கையில் கிடைக்காததால், அவனுடன் அமைதியாக இருந்த உன்னை அடிக்கிறேன் என்று வடிவேல் பாணியில் கூறி செல்கிறான். 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் பலன் இருக்காது என்றும், இசைக்குழு தரப்பு வாலிபர்களை பாதுகாக்க சங்க அணிகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இது போன்ற கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் பல்வேறு சண்டைகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆதாரபூர்வமாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பள்ளி என்பது மக்களுக்குள் பல ஜாதி, மத இனங்கள் இருந்தாலும் அனைவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை வளர்க்கும் இடமாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது நடைபெறும் சண்டைகள் அதனை உடைத்தெறிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், இவர்களையெல்லாம் எதுவும் செய்ய முடியாது என்பதால் ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிக்க தயக்கம் காண்பித்து வருவதே இவ்வாறான குற்றங்களுக்கு அதிகளவு வழிவகை செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai KilPennathur Govt School Students Fight about Caste Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->