திருவண்ணாமலை: சந்தவாசல் கிராமத்தில் இளைஞர்கள், குழந்தைகளுக்கான தடகள போட்டி..! - Seithipunal
Seithipunal


கண்ணமங்கலம் அடுத்த, சந்தவாசல் கிராமத்தில் இளைஞர்கள், குழந்தைகளுக்கான தடகள ஓட்டப்பந்தயம் இன்று (28.07.2021) நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் சந்தவாசல் பகுதியில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த இளைஞர்களும், சிறுவர்களும் திரளாக கலந்துகொண்டனர். 

இத்தடகள போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் 5000 மீட்டர், 1600 மீட்டர், 400 மீட்டர், 200 மீட்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனர். பல்வேறு வயதுடையவர்களுக்கும் தனித்தனிப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 5000 மீட்டர் பிரிவில் கமல் முதலிடத்தையும், ரஞ்சித் இரண்டாமிடத்தையும் யுவராஜ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

1600 மீட்டர் பிரிவில் முத்து, பாலா, அருண் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு School Games Development Foundation மற்றும் Challenge Friends Club சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் அமுல்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசு பெற்றவர்களை வாழ்த்தினார். இப்போட்டியினை  சமூக ஆர்வலர் செல்வம், பயிற்சியாளர் அஜீத் மணி மற்றும் இராணுவ, காவல்துறை வீரர்கள் மணி, விஜய், விக்னேஷ், ஜீவா சூரியா, மோகன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Kannamangalam Village Youth and Children Athletic Race was held Today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->