ஜவ்வாது மலைக்கிராம தலைமை நாட்டாமையாக 9 வயது சிறுவன் தேர்வு..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை 3 மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை இணைத்துள்ள ஜவ்வாது மலையில் 427 மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த மலைக்கிராமங்கள் 36 கிராமமாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 

ஒவ்வொரு கிராமத்திலும் நாட்டாமை, ஊர் கவுண்டர், மூப்பன் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, இவர்கள் கிராமங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடித்து வைப்பார்கள். நாட்டாமையின் இறுதி தீர்ப்புக்கு அடிபணியும் சட்டத்தை இன்று வரை கடைபிடித்து வருகின்றனர். மேலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றால் 427 கிராம நாட்டாமைகளின் முன்னிலையில் மணமக்களின் பூர்வீகம், இனம் தொடர்பான விஷயங்கள் கேட்கப்பட்ட பின்னரே திருமணம் நடைபெறும்.

இதனைப்போன்று, ஊர் திருவிழாவையும் அவர்களே முடிவு செய்வார்கள். அதன்படி கிராம மக்களும் நடந்துகொள்வார்கள். அவர்களின் வாழ்வியலில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். இந்நிலையில், அங்குள்ள மல்லிமடு கிராமத்தை சார்ந்த 87 வயது நாட்டாமை சின்னாண்டி, கடந்த ஒருவருடத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 

ஒரு வருடமாக நாட்டாமை பதவி காலியாக இருந்த நிலையில், அவர்களின் வழக்கப்படி 36 ஊர் நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பர்கள் ஆகியோர் சேர்ந்து தெய்வ நம்பிக்கைப்படி சின்னாண்டியிடம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு நாட்டாமை தேர்ந்தெடுக்கப்பட்டார். சின்னாண்டிக்கு முத்துசாமி, வெள்ளைக்கண்ணன்,  பெருமாள் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட வாரிசுகள் உள்ள நிலையில், ஆண் - பெண் என 21 பேரக்குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் சிறப்பு பூஜை நடத்திய பின்னர் சின்னாண்டியின் இரண்டாவது மகன் முத்துசாமியின் 9 வயது பேரன் சக்திவேல் நாட்டாமையாக நிர்ணயம் செய்ய தெய்வம் வாக்கு வழங்கியதன் பேரில், நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் சேர்ந்து தலைமை நாட்டாமையாக 9 வயது சக்திவேலை தேர்வு செய்தனர். சக்திவேலின் சொந்த ஊரான மள்ளிமடு கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி பட்டம் சூட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் மலைக்கிராமத்தை சார்ந்த நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள் மற்றும் மூப்பன்கள் ஆகியோர் சேர்ந்து நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சக்திவேலுக்கு செங்கோலை வழங்கினார். சிறுவன் சக்திவேல் நாகலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி புதிய நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சக்திவேலின் சொல்லுக்கு அக்கிராம மக்கள் ஒத்துழைப்பை வழங்குவார்கள். சிறுவனும் பெரியவர்களின் சொல்படி, தனது தாத்தாவின் வழியில் செயல்படுவேன் என உறுதியளித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Javadhu Hills 9 year old boy selected as chief nominee


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->