கிணற்றுக்குள் அம்மா என சத்தம்.. தீயணைப்பு மீட்பு துறைக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த விவசாயி.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிளியப்பட்டு கிராமத்தில் விவசாயி சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இருக்கும் தோப்பில், மாடுகள் மேய்வது வழக்கம். 

இந்த தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணறும் இருக்கிறது. இந்த நிலையில், இன்று தாயுடன், கன்றுக்குட்டி மேய்ந்து கொண்டு இருந்தது. இந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்தது. 

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கயிற்றின் மூலமாக கன்றுக்குட்டியை மீட்டனர். தீயணைப்பு படையினருக்கு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai cow rescue form well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->