முனியாண்டி விலாஸ் உணவகம் சூறை.. திமுக இ.அ ஓசி சோறு உ.பி சாப்பிட்டதற்கு காசு கொடுக்காமல் அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


சேத்துப்பட்டு அருகே திமுக குண்டர்கள் புரோட்டா சாப்பிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட, உணவகத்தை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு 7.30 மணியளவில் வருகை தந்த திமுக இளைஞர் அணி பாபு என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். 

பின்னர் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து பிரச்சனை செய்த நிலையில், கடை ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த புரோட்டா மாஸ்டர் மற்றும் பெண் ஊழியர்களை ஆபாசமாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். 

இதனால், பாபுவிற்கும் - பரோட்டா மாஸ்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் தங்களை மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதன்பின்னர் அங்கிருந்து பரோட்டா மாஸ்டர் சென்று விடவே, பாபு தனது ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து கடையை சூறையாடி உள்ளார். 

மேலும், பாபுவின் நண்பர் குணா மறுநாள் காலையில் வந்து ஓட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர் திமுக ஆதரவாளர் என்பதால், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க விடாமல், ஊர் பஞ்சாயத்து மூலமாக பிரச்சினையை பேசி தீர்க்க முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Chepat DMK Supporters Demolish Hotel Muniyandi Vilas 25 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->