ஆரணி: திருட்டு வழக்கில் சிக்கியவனின் தில்லாலங்கடி.. கல்பிறெட் விபத்தில் மரணம்... சொந்தங்கள் அடாவடி.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை சார்ந்தவர் மோகன். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி வேலைப்பாடி கிராமத்தில் டிராக்டர் மூலமாக வைக்கோல் உருட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக பணியை முடித்துவிட்டு பலாந்தாங்கல் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள கோவில் அருகே டிராக்டரை நிறுத்தியுள்ளார். 

பின்னர், உடல் சதியால் டிராக்டரிலேயே உறங்கிவிட்ட நிலையில், அங்கு வந்த 3 பேர் மோகனை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டிவிட்டு நிலையில், கிராம மக்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது வாகனத்தை மோதவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், 2 பேர் தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஆரணி புனலப்பாடி கிராமத்தை சார்ந்த சக்திவேல் (வயது 27), ஆரணி பாளையம் பகுதியை சார்ந்த சூர்யா (வயது 25), மணிகண்டன் (வயது 25) என்பதும், படுகாயமடைந்தவர் சக்திவேல் என்பதும் உறுதியானது. 

இந்த விஷயம் தொடர்பாக மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி காவல் துறையினர் 3 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல், மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனால் சக்திவேலின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து, விபத்தினை கொலையாக சித்தரித்து ஆரணி காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமெழுப்பி போராட்டம் செய்தனர். இதனை அறிந்த கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், சக்திவேலின் குடும்பத்திடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Thief Died in Accident Thief Relatives Protest at Police Station 12 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->