ஆரணி: மூதாட்டியின் நெகிழ்ச்சி செயல்... பள்ளிக்கூட கட்டிடம் கட்ட, நில தானம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 104 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூட கட்டிடம், தற்போது சிதலமடைந்து காணப்பட்டது. 

இந்த நிலையில், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பள்ளியின் தலைமை ஆசிரியை ஊர் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதன் போது, தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்குகிறேன் என்று 68 வயது மூதாட்டியான சரோஜா என்பவர் முன்வந்துள்ளார். 

இந்த தருணத்தில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, பள்ளிக்காக நிலத்தை தானமாக கொடுப்பது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ? என்று எண்ணத்தில் கவலை அடைந்துள்ளார். 

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நிலத்தை பள்ளிக்கு குடும்பத்துடன் சேர்ந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.26 லட்சம் செலவில், புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டு உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani OldLady Land donation for School Construction


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->