பெண்களுக்கும், பெண்மைக்கும் எதிரான திமுக கூட்டணி கட்சிகள் - மருத்துவர் அன்புமணி அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக பெண்களுக்கு எதிரான கட்சி. பெண்மைக்கு எதிரான கட்சி. திமுக கூட்டணி மற்றும் திமுகவின் வரலாறுகள் அப்படிப்பட்டது என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசினார்.

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " 

அண்ணா தமிழக முன்னேற வேண்டும், தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்று கட்சியை தொடங்கினர். இன்று கலைஞரின் குடும்பம் மட்டும் தான் முன்னேறியுள்ளது. கலைஞர் குடும்பம் மட்டும் முன்னேற அண்ணா கட்சி தொடங்கினாரா?. திமுக குடும்ப கம்பெனியில் வெறும் நிதி தான். கருணாநிதி, உதயநிதி, இன்னும் பல நிதிகள். 

பீகாரை சார்ந்த பிரஷாந்த் கிஷோர் அரசியல் வியாபாரி. கூலி யார் கொடுக்கிறார்களோ, அவர்களிடம் பணியாற்றுவர். பொய்யான பதிவுகளை பரப்புவது அவர்கள் தான். ஊடகத்திற்கு காசு கொடுத்து, அவர்களுக்கு சாதகமானதை செய்வார். பிரசாந்த் கிஷோரிடம் முதல்வர் கனவை தெரிவித்துவிட்டு, தமிழகத்தை எப்படி மு.க ஸ்டாலின் ஆட்சி செய்வார். 

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் நமக்கு. விவசாயி இந்த தேர்தலில் வெற்றியடைய வேண்டும். சேவூர் இராமச்சந்திரனிற்கு அமோக வாய்ப்பை வழங்கி வெற்றிபெற வையுங்கள். விவசாயிகள், பெண்கள், தாய்மார்கள் என பலரின் ஆதரவு நமக்கு தான் உள்ளது. 

திமுக பெண்களுக்கு எதிரான கட்சி. பெண்மைக்கு எதிரான கட்சி. திமுக கூட்டணி மற்றும் திமுகவின் வரலாறுகள் அப்படிப்பட்டது. பெண்களை தெய்வமாக வணங்கும் இந்த மண்ணில், பெண்கள் குறித்து திமுகவின் அவதூறாக பேசுகிறார். தாயை பற்றி கொச்சையாக பேச, ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?. இதனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Election Campaign Anbumani Ramadoss 2 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->